ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!

சிவா நாராயண மூர்த்தி

சிவா நாராயண மூர்த்தி

Siva Narayana Moorthy : சிவ நாராயணமூர்த்தி பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 67.

தன்னுடைய உடல் அமைப்பு மற்றும் முக பாவணைகளால் தமிழ் திரைப்படங்களில் போலீஸ், கிராமத்து பண்ணையார் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சிவ நாராயணமூர்த்தி. இயக்குநர் விசுவால் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட சிவ நாராயணமூர்த்தி, பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார்.

67 வயதான இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்த காட்சிகள் மிக பிரபலம். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள சிவ நாராயணமூர்த்தி, படப்பிடிப்பு இல்லாத நாட்களில், புதுக்கோட்டை அருகேயுள்ள அணைக்கட்டு கிராமத்திற்கு சென்று குடும்பத்துடன் வசிப்பது வழக்கம். அதன்படி சொந்த ஊர் சென்றவர் நேற்றிரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுவரை 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சிவ நாராயணமூர்த்திக்கு 2 மகன்களும் ஒரு மகனும் உள்ளனர்.

First published:

Tags: Kollywood