சர்கார் ’விஜய்’ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார்

Sarkar | தமிழக அரசின் சின்னம் பதிவிட்ட இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளன; அவை தமிழக அரசை இழிவுப்படுத்துவது போல் உள்ளதாக புகார்

Web Desk | news18
Updated: November 8, 2018, 7:15 PM IST
சர்கார் ’விஜய்’ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார்
நடிகர் விஜய்
Web Desk | news18
Updated: November 8, 2018, 7:15 PM IST
தமிழக அரசை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால், நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செம்பியத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் மனுவொன்றை இன்று அளித்தார். அந்த மனுவில், 'தமிழக அரசின் சின்னம் பதிவிட்ட இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளன. அவை தமிழக அரசை இழிவுப்படுத்துவது போல் உள்ளன’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தேவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: லாபம் சம்பாதிப்பதற்காக தமிழக அரசின் சின்னம் பதிக்கப்பட்ட பொருட்களை தீயிட்டு கொளுத்துவது என்பது அரசை இழிவுப்படுத்தும் செயலாகும். தெரிந்தே இதை செய்த நடிகர் விஜய் மீதும், படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்துப் புகார் மனு கொடுத்துள்ளேன் என்றார் தேவராஜ்.

Also watch

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்