ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுக்கும் டாப்சி!

கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுக்கும் டாப்சி!

டாப்சி

டாப்சி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்திய கிரிக்கெட் வீராங்கணை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அந்த படத்தில் நடிகை டாப்சி, மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் இந்திய வீராங்கணை மிதாலி ராஜ். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மிதாலி ராஜ் 203 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6720 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி பல போட்டிகளில் வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்த மிதாலி ராஜ் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளை யும் பெற்றுள்ளார்.

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கணையாக உள்ள மிதாலி ராஜின் வேடத்தில் டாப்சி நடிக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “என் வாழ்நாளில் நான் ஒரு போதும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடிதில்லை.

இதனால் இந்த படம் எனக்கு மிகப் பெரிய சவலாக இருக்கும். மிதாலி ராஜின் கிரிக்கெட் விளையாடிய போட்டிகளின் வீடியோவை பார்த்து, என்னை தயார்படுத்தி வருகிறேன்“ என்றார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Mithali Raj, Taapsee Pannu