ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் - டாப்ஸி பகீர் தகவல்

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் - டாப்ஸி பகீர் தகவல்

நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி

திரைத்துறையில் தான் சந்தித்த மோசமான அனுபவங்களை நடிகை டாப்ஸி வெளிப்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடந்த 2010-ம் ஆண்டு ‘ஜும்மாண்டி நாடம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டாப்ஸி, ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வைராஜா வை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த டாப்ஸி தெலுங்கிலும், இந்தி மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தினார்.

தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி ஆரம்பத்தில் தான் திரைத்துறையில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் டாப்ஸி கூறியுள்ளதாவது, “ஹீரோவின் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு படத்திலிருந்து நான் நீக்கப்பட்டிருக்கிறேன். ஒரு ஹீரோவுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை என்பதால் ஆனால் நான் மறுப்பு சொன்னதால் எனக்குத் தெரியாமல் வேறு ஒரு டப்பிங் கலைஞரை பேச வைத்தார்கள். ஒரு படத்தில் ஹீரோவின் காட்சியை விட எனது அறிமுக காட்சி சிறப்பாக இருந்ததால் எனது சீனை மாற்ற வைத்தார். ஒரு நடிகரின் முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதால் எனது சம்பளத்தை குறைக்கச் சொன்னார்கள்.

மேலும் படிக்க: ஜெமினி கணேசன் 100 : தமிழ் சினிமாவின் காதல் மன்னனைப் பற்றி யாரும் அறியாத உண்மைகள்

எனது திரைத்துறை பயணத்தின் தொடக்கத்தில் இப்படி பல்வேறு விதமான நெகட்டிவ்வான அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். எந்தப் படத்தில் பணியாற்றினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ அந்தப் படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்த பின்னர் ஒரு சில ஹீரோக்கள் அந்த நடிகையை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயங்க ஆரம்பித்துவிடுவார்கள்” இவ்வாறு நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Taapsee Pannu