அரசியலில் வெற்றி பெற அதிர்ஷ்டம் வேண்டும்... டி.ராஜேந்தர்!

  • News18
  • Last Updated :
  • Share this:
அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் பேசுகையில் சினிமா தொழில் இன்று நஷ்டமடைந்து வருவதாகவும் அதை காப்பாற்ற போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சினிமா விநியோகஸ்தர்கள் தேர்தலில் மாற்றம் வர வேண்டும் எனவும் அப்போது தான் தமிழக முழுவதும் சினிமா விநியோகம் சிறப்பாக இருக்கும் என டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

நண்பர்கள் வற்புறுத்திக்கேட்டுக்கொண்டதால் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் சினிமாவை காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தற்போது யாருக்கும் அல்வா கொடுக்க வேண்டிய தேவை தமக்கில்லை என கூறிய டி.ராஜேந்தர் ஆட்சியை பிடிப்பதற்காக தாம் கட்சி தொடங்கவில்லை என்றும் ஆட்சியில் இருப்பவர்களை பிடி பிடியென பிடிப்பதற்காக கட்சி தொடங்கியதாக கூறினார்.

ரஜினி,கமலை விட அரசியலில் சீனியர் நான் எனவும் அரசியல் குறித்து அவர்கள் எடுக்கும் முடிவு குறித்து தான் எந்த கருத்தும் கூற முடியாது என்றும் தான் எந்த கருத்து கூறினாலும் அதை யார் கேட்கபோகிறார்கள் எனவும் டி.ராஜேந்தர் கூறினார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: