தயாரிப்பாளர்கள் சங்க பதவியை ராஜினாமா செய்வதாக டி.ராஜேந்தர் அறிவிப்பு

தயாரிப்பாளர்கள் சங்க பதவியை ராஜினாமா செய்வதாக டி.ராஜேந்தர் அறிவிப்பு

டி. ராஜேந்தர்

சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்வதாக திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

  இது குறித்து டி.ராஜேந்தர், “பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27-ம் தேதி காலை நடைபெற இருக்கிறது.

  எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.

  எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: