ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு எனப் புகார்.. வாக்குப்பதிவு ஆவணங்களைக் கேட்டு டி.ஆர். மனு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு எனப் புகார்.. வாக்குப்பதிவு ஆவணங்களைக் கேட்டு டி.ஆர். மனு

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

தமிழ்த் திரைப்பட தயரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி, பதிவுத்துறை அலுவலகத்தில் டி.ராஜேந்தர் வாக்குபதிவு ஆவணங்களை கேட்டு மனு அளித்துள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

1303 வாக்காளர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் அப்போது 1050 வாக்குகள் பதிவாகின.

‘மெர்சல் படத்தின்’ தயாரிப்பாளர் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் 378 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்றனர். 18 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி வாக்குப்பதிவு ஆவணங்களைக் கேட்டு பதிவுத்துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது தான் வரலாறு. அடுத்தநாள் வாக்கு எண்ணியதற்கான காரணம் என்ன?. பழைய ராஜேந்தரால் இருந்திருந்தால் தேர்தலை புறக்கணித்திருப்பேன் என்னால் மற்ற போட்டியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் போராடவில்லை. தேர்தல் தாமதமாக 8.20-க்கு தொடங்கியதால் 4.20 வரை நடந்திருக்க வேண்டும். ஆனால் 4 மணி வரைதான் நடந்தது. தேர்தலில் போலியான ஆவணங்கள் அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

வாக்களித்த 1,050 வாக்காளர்கள் பட்டியல், அவர்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு வேண்டும் என பதிவாளரிடம் கேட்டிருக்கிறேன். மணிக்கு மணி வாக்கு பதிவு விவரங்கள், ஓய்வு பெற்ற நீதியரசர் கையெழுத்திட்டு அடையாள அட்டை பெற்றுக்கொண்டவர்கள் பட்டியல் உள்ளிட்டவையும் மனு கொடுத்திருக்கிறேன்.

இந்த ஆதாரங்களை திரட்டி முதல் படியை தொடங்கியிருப்பதாகவும், 1,050 ஓட்டுகளில், 800 ஓட்டுகள் தான் நல்ல ஒட்டுகள். மீதி கள்ள ஒட்டுகள். கடந்த தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு பெற்றவர்கள் இன்று அதிக ஒட்டு பெற்றது எப்படி. பின் வாசல் வழியாக வாக்களிக்க சிலர் அழைத்து வரப்பட்டது ஏன் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

தயரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து சந்தா காட்டாமல், தொடர்பில் இல்லாமல் இருந்தவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு வாக்களித்தது எப்படி என சந்தேகம் எழுப்பிய அவர், தயாரிப்பாளர் சங்கர் தேர்தலில் இவ்வளவு சூழ்ச்சி. இது இறைவன் தமிழக அரசியலில் நிக்க தனக்கு தந்திருக்கிறான் ஒரு பயிற்சி என்றார்.

விதிப்படி படம் வெளியிட்டு 5 ஆண்டுகள் ஆகி இருந்தால் மட்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி உண்டு என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஒரே ஒரு திரையரங்கில் ஒரு காட்சி மட்டும் வெளியிட்ட தயரிப்பாளர் தேர்தலில் நின்றார் என்றும் இப்படி தகுதி இல்லாத 3 பேர் தேர்தலில் போட்டியிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Tamil cinema Producer council