• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிம்புவின் திருமணம் எப்போது? - கண் கலங்கிய டி.ராஜேந்தர்

சிம்புவின் திருமணம் எப்போது? - கண் கலங்கிய டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியை எதிர்கொள்ளும்படியாக என்னை இறைவன் வைத்துள்ளான் என்பதை நினைத்து வேதனையடைகிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்தார் டி.ராஜேந்தர்.

    இயக்குநர் டி.ராஜேந்தரின் இரண்டாவது மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், தான் காதலித்த நபீலா அஹமதுவை கடந்த 26-ம் தேதி திருமணம் செய்தார்.

    இதையடுத்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், “என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நான் என் மகனுடைய திருமணத்திற்கு பலருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது. அதனால் பல பத்திரிகையாளர்களை என்னால் வரவேற்க முடியாமல் போனது.



    சிம்பு மற்றும் என்னுடைய வளர்ச்சியில் ஊடகத்துறையினர் பங்கு அதிகம். ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், உதயநிதி , திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், நடிகர்கள் என வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பலரை என்னால் அழைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

    சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட காதலை ஏற்றுக்கொள்பவன். அதனால்தான் குறளரசன் விரும்பியபடி திருமணம் நடைபெற்றது. பிள்ளைகள் ஆசைப்பட்டதுபோல் திருமணம் நடத்தி வைக்கும் தாய் தந்தையாக எல்லாரும் இருக்க வேண்டும்.” என்றார்.

    மேலும், சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியை எதிர்கொள்ளும்படியாக என்னை இறைவன் வைத்துள்ளான் என்பதை நினைத்து வேதனையடைகிறேன் என்று கூறிய போது அவரது கண்கள் கலங்கின.

    மலர் அலங்காரத்தில் ஜொலித்த மேடை..! குறளரசனை வாழ்த்திய திரைத்துறை பிரபலங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: