சன் டிவி நிலா சீரியலிலுக்கு பை பை சொன்ன நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

சியமந்தா கிரண்

நீலா சீரியலின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு சிறந்த அனுபவத்தைத் தந்தது.

 • Share this:
  சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிலா சீரியலில் இருந்து நடிகை சியமந்தா கிரண் விலகியுள்ளார்.

  நடிகை சியமந்தா கிரண் சீரியல்களில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம், நிறைய ரசிகர்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில் ‘நிலா’ தொடரில் இருந்து விலகிய விஷயத்தை, தனது இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Syamantha Kiran (@syamanthakiran)


  நிலா சீரியலில் இருந்து ஒரு சில படங்களை பகிர்ந்து கொண்ட சியமந்தா, “அஞ்சலி இனி இல்லை. இந்த படங்கள் அனைத்தும் பழைய நினைவுகள்! நீலா சீரியலின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு சிறந்த அனுபவத்தைத் தந்தது. இது எனக்கு மிகவும் சவாலான பாத்திரம். அதில் நான் வாழ்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்! எல்லாவற்றிற்கும் என் குழுவிற்கு நன்றி. ஆம் அதிகாரப்பூர்வமாக இனி நான் அதில் இல்லை!
  உங்களின் அனைத்து ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

  நிலா சீரியலில் அஞ்சலி வேடத்தில் சியாமந்தா கிரண் நடித்து வந்தார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாத்திரங்களில் ஒன்றாகும். அவர் இந்த சீரியலை விட்டு விலகியதால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். சில தொழில்முறை காரணங்களுக்காகத் தான் சியமந்தா கிரண் ‘நிலா’ சீரியலில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: