பெண்களை ரொம்பவே மதிப்பாங்க எங்க சமூகத்தில்... நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்த பி.இ பட்டதாரி!

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ராதிகாவுடன் ஸ்வேதா

#ColorsKodeeswari |

 • News18
 • Last Updated :
 • Share this:
  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் இன்று நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்த பொறியியல் பட்டதாரியான ஸ்வேதா பங்கேற்கிறார்.

  பெண்களுக்காக பிரத்யேகமாக தமிழிலும் கோடீஸ்வரி விளையாட்டு நிகழ்ச்சி "கலர்ஸ் தமிழ்" தொலைக்காட்சியில் கடந்த 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது

  இந்நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார்.  இந்த நிகழ்ச்சி தொடர்பாக முன்னதாக பேசியிருந்த அவர், பெண்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் நான் ஒரு கருவியாக இருக்கப்போவதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார்.

  தொடர்ந்து 4 நாட்களாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் 5-வது நாளான இன்று புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டது. அதில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்த முதல் பொறியியல் பட்டதாரியான ஸ்வேதா பங்கேற்கிறார்.  அப்போது பேசிய ஸ்வேதா, நரிக்குறவர் சமூகத்தில் இருந்து இந்த மாதிரி ஒரு இடத்துக்கு வருவது சாதாரண விசயம் அல்ல. ஒருவர் இப்படி இருக்க கூடாது என்பது போன்ற ஒரு கலாசாரம் எங்க சமுதாயத்தில இல்லை என்று தெரிவித்த ஸ்வேதா ஆண்கள் தான் பெண்களுக்கு டவுரி கொடுப்பார்கள். பெண்களை ரொம்பவே மதிப்பாங்க எங்கள் சமூகத்தில் என்றும் தெரிவித்தார்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: