• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை சுவாதி தன் காதலனை கரம்பிடித்தார்!

நடிகை சுவாதி தன் காதலனை கரம்பிடித்தார்!

நடிகை சுவாதி - விகாஸ்

நடிகை சுவாதி - விகாஸ்

  • News18
  • Last Updated :
  • Share this:
சுப்ரமணியபுரம் படத்தின் நாயகி நடிகை சுவாதி விமானியை மணமுடித்துள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.



இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி - விகாஸ் திருமணம் நேற்று ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை கேரளாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: