• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்

பிக்பாஸ் பிரபலம் ஸ்வாமி ஓம்

பிக்பாஸ் பிரபலம் ஸ்வாமி ஓம்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிக்பாஸ் பிரபலம் ஸ்வாமி ஓம் இன்று காலமானார்.

  • Share this:
தமிழில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் 14 -வது சீசனை எட்டியுள்ளது. இந்தியில் 10-வது சீசனில் கலந்து கொண்டவர் ஸ்வாமி ஓம். தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையானது.

பானி ஜே மற்றும் ரோஹன் மெஹ்ரா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடங்கி பல்வேறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு சர்ச்சை நாயகனாக வலம் வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்வாமி ஓம் சிகிச்சைக்க்குப் பிறகு தொற்றிலிருந்து மீண்டார். ஆனாலும் அவரது உடல் மிகவும் நலிவடைந்தது. இதையடுத்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை மரணமடைந்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முடக்குவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதி சடங்குகள் இன்று மதியம் நடைபெற்று முடிந்தது.

மேலும் படிக்க: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீரியல் நடிகை வைல்ட் கார்ட் என்ட்ரி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையாளம் பிக்பாஸ் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னணி பாடகர் சோமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். சோமதாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் மாரடைப்பு ஏற்பட்டு சோமதாஸ் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.



உடனடிச் செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: