இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்குகிறார் நடிகை சுஷ்மிதா சென்..!

முற்றிலும் ரசிகர்களின் வேண்டுகோள்களால் மட்டுமே மீண்டும் சினிமாவின் கால் பதிக்கத் தயாராகி உள்ளதாகவும் சுஷ்மிதா விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்குகிறார் நடிகை சுஷ்மிதா சென்..!
சுஷ்மிதா சென்
  • News18
  • Last Updated: December 9, 2019, 8:36 PM IST
  • Share this:
10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார் நடிகை சுஷ்மிதா சென்.

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வெளியான ‘நோ ப்ராப்ளம்’ என்ற இந்தித் திரைப்படத்துடன் திரை வாழ்விலிருந்து விடைபெற்றார் நடிகை சுஷ்மிதா சென். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முற்றிலும் ரசிகர்களின் வேண்டுகோள்களால் மட்டுமே மீண்டும் சினிமாவின் கால் பதிக்கத் தயாராகி உள்ளதாகவும் சுஷ்மிதா விளக்கம் அளித்துள்ளார். சுஷ்மிதா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். முதல் குழந்தையைத் தத்தெடுத்த போது சினிமாவின் பிஸியான நடிகையாக இருந்த சுஷ்மிதா தன் குழந்தை வளர்வதை அருகில் இருந்து பார்க்க விரும்பினாராம்.


இதனாலே கடந்த 2010-ம் ஆண்டு தனது இரண்டாவது மகளைத் தத்தெடுத்த சுஷ்மிதா, குழந்தையுடன் நேரம் செலவிடும் நோக்கிலேயே சினிமாவைவிட்டு வெளியேறியதாக தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஐடி ஊழியர்..!
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்