சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து, கவனம் பெறும் அவரின் முன்னாள் பெண் மேலாளர் தற்கொலை விவகாரம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டநிலையில், கடந்த சில தினங்களுக்கு சுஷாந்த்தின் முன்னாள் பெண் மேலாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. 

சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து, கவனம் பெறும் அவரின் முன்னாள் பெண் மேலாளர் தற்கொலை விவகாரம்
திஷா சலியன்
  • Share this:
தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34.

அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பை பந்தராவில் உள்ள அவரது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அறையின் கதவை உடைத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புட்டிடம் முன்னாள் மேலாளராக இருந்தவர் திஷா சலியன். அவருக்கு வயது 25. கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த அவர், மும்பையில் வசித்துவந்தார். திஷாவுக்கு ரோஹன் ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தநிலையில் அவருடன் தான் வசித்து வந்தார். அவர், ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திஷா தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துவருகின்றனர். இந்தநிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading