சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த ‘தில் பேச்சாரா’ பட ட்ரெய்லர் ரிலீஸ்
சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
- News18 Tamil
- Last Updated: July 6, 2020, 6:43 PM IST
ஜான் க்ரீன் எழுதிய "தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தில் பேச்சாரா. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஜூலை 24-ம் தேதி இத்திரைப்படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சுஷாந்துக்காக இத்திரைப்படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங், கடந்த மாதம் 14-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் குடும்பத்தினர், திரை பிரபலங்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஷாந்த் கடைசியாக நடித்த ‘தில் பேச்சாரா’ படத்தை ஓடிடி தளத்தில் அல்லாமல் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் தில் போச்சாரா படம் வரும் 24ம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.