சுஷாந்த் சிங்கின் இழப்பை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட ரசிகை

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங்கின் இழப்பைத் தாங்க முடியாமல் அவரது ரசிகை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதாகும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

  சுஷாந்தின் மரண செய்தி இந்தியாவையே உலுக்கிய நிலையில் பிரதமர் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திரைத்துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

  வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடர்ந்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

  கடந்த சில நாட்களாகவே சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான செய்திகள் சமூகவலைதளங்களில் அதிக கவனம் பெற்று வரும் நிலையில், அந்த மரணத்தை தாங்க முடியாமல் சுஷாந்தின் ரசிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த 21 வயதுடைய இளம் ரசிகை ஒருவர் சுஷாந்தின் மறைவுக்கு பின்னர் மனம் உடைந்து போயுள்ளார். துக்கம் அதிகரிக்கவே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  மேலும் படிக்க: திரைக்குப் பின்னால் சுஷாந்த் செய்த குறும்புகள்.... இணையத்தில் வைரலாகும் வீடியோ

  இதுகுறித்து போலீஸ் கூறுகையில், சுஷாந்தின் வீடியோக்களைப் பார்த்து மிகவும் வேதனையில் இருந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்த போது தனது படுக்கையறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
  Published by:Sheik Hanifah
  First published: