• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • சுஷாந்த் சிங் மரணித்த தருணத்தில் அதே வீட்டிலிருந்த நண்பர்கள் - போலீசார் விசாரணை

சுஷாந்த் சிங் மரணித்த தருணத்தில் அதே வீட்டிலிருந்த நண்பர்கள் - போலீசார் விசாரணை

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

Sushant Singh Rajput | பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம், ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  பிகார் மாநிலம் Purnea பகுதியில் பிறந்த சுசாந்த் சிங் ராஜ்புத், பள்ளி, கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கிய போதிலும் நடிப்பு மீதான ஆர்வம் காரணமாக தனது பொறியியல் படிப்பை பாதியிலேயே கைவிட்டார். தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் ஈர்த்தவர், அதன் மூலம் பாலிவுட் திரையுலகின் கதவையும் தட்டினார்.

  2013-ம் ஆண்டு வெளியான Kai Po Che படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அதே ஆண்டு சுத்தேசி ரொமான்ஸ் எனும் ரொமாண்டிக் படத்திலும் நடித்து குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

  குறிப்பாக தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான Dhoni the untold story படத்தில் அச்சு அசல் தோனியை போலவே நடித்ததன் மூலம் இந்தியா முழுவதுமே இவர் புகழடைந்தார்.

  சுஷாந்த் சிங் ராஜ்புத்


  தோனியின் நடை, சிரிப்பு, உடல் மொழி என அத்தனை நுணுக்கங்களையும் துல்லியமாக கொண்டு வந்ததன் மூலம், தான் மிகச்சிறந்த நடிகர் என்பதையும் உணர்த்தினார்.

  குறும்பு சிரிப்பு, துள்ளலான நடிப்பு மற்றும் ரொமாண்டிக் காட்சிகளில் வெளுத்து வாங்கியதால் பாலிவுட்டின் அடுத்த ஷாருக்கான் இவர்தான் என பலரும் ஆருடம் கூற ஆரம்பித்தனர். அடுத்தடுத்த வெற்றிகளும் பாலிவுட்டில் இவருக்கான தனி இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது இவருடைய திடீர் மறைவு செய்தி, ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் உலுக்கி போட்டிருக்கிறது.

  தோனி உடன் சுஷாந்த்


  மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் அதிகாலை சுசாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் கூறப்படுகிறது. சுசாந்த் சிங் இறந்த போது அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த ஜூன் 8-ம் தேதி சுசாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியன் தனது குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதால் இவை இரண்டிற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Also See:

  ’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்

  சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankar
  First published: