சுஷாந்த் சிங் உயிரிழப்பு - பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

நடிகர் சுஷாந்த் சிங் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.

  சுஷாந்த் சிங் இறந்த போது அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த ஜூன் 8-ம் தேதி சுசாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியன் தனது குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதால் இவை இரண்டிற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சுஷாந்த் சிங்கின் மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், அவரது சகோதரியின் கணவரான ஓ.பி சிங், சுஷாந்தின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; தீவிர விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார்.

  சுஷாந்த் சிங் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தூக்கிட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. பாட்னாவில் இருந்து விமானம் மூலம் அவரின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மும்பை வந்து கொண்டிருக்கின்றனர்.

  ஹரியானா முதல்வர் உடன் சுஷாந்த் மற்றும் ஓ.பி சிங்


  ஓ.பி சிங் ஹரியானா மாநில காவல்துறையில் ஏ.டி.ஜி.பி ஆக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ், பாட்னாவில் இன்று கூறியுள்ளார். சுஷாந்த் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Also See:

  சுஷாந்த் சிங் மரணித்த தருணத்தில் அதே வீட்டிலிருந்த நண்பர்கள் - போலீசார் விசாரணை


  ’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்

  சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?  Published by:Sankar
  First published: