சூர்யா 37: கெட்ட வார்த்தையில் டைட்டில் வைக்க முடியுமா? - கே.வி.ஆனந்த் கோபம்

இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் ஆர்யா மற்றும் சூர்யா

சூர்யா 37 பட டைட்டிலுக்காக ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் கே.வி.ஆனந்த், கெட்டவார்த்தையில் டைட்டில் வைக்க முடியுமா என்று கூறி கோபமடைந்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சூர்யா 37 பட டைட்டிலுக்காக ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் கே.வி.ஆனந்த், கெட்டவார்த்தையில் டைட்டில் வைக்க முடியுமா என்று கூறி கோபமடைந்துள்ளார்.

  அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.  கடந்த ஜீன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா, என்.எஸ்.ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், தனது படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று கூறி அதற்கான பெயர்களை தேர்வு செய்யுமாறு பதிவிட்டிருந்தார். அதில் மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

  ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை அவரவர் விருப்பப்படி கூறிவந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் இயக்குநர் கே.வி.ஆனந்திடம் வேறு ஏதேனும் ஆப்ஷன் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த கே.வி.ஆனந்த் பீப் வார்த்தைகளில் திட்டி அதுக்குன்னு கெட்ட வார்த்தையில் டைட்டில் வைக்க முடியுமா என்று கோபமாக கூறியுள்ளார்.

  மூலிகை தோட்டம், கராத்தே, வண்ண மலர்கள்...தனியார் பள்ளியை மிஞ்சும் அரசுப்பள்ளி - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: