Home /News /entertainment /

மகன் நடிக்க வருகிறாரா? - சூர்யா தரப்பு விளக்கம்

மகன் நடிக்க வருகிறாரா? - சூர்யா தரப்பு விளக்கம்

தனது குழந்தைகளுடன் சூர்யா - ஜோதிகா தம்பதி

தனது குழந்தைகளுடன் சூர்யா - ஜோதிகா தம்பதி

சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் சூர்யாவின் மகன் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

    சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். பெற்றோர் திரைத்துறையில் நட்சத்திரங்களாக ஜொலித்தாலும் குழந்தைகள் இதுவரை படங்களில் நடித்ததில்லை.

    இந்தநிலையில் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க 6-8 வயது நிரம்பிய சிறு குழந்தைகள் தேவை" என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.

    10 வருடத்துக்கு முந்தைய விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்! #10yearschallange



    இதை வைத்து நடிகர் சூர்யாவின் மகன் தேவ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.



    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், சூர்யாவின் நெருங்கிய நண்பருமான ராஜசேகர் பாண்டியன் “தவறான செய்தி இது. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று கூறியுள்ளார்.



    மீண்டும் வெற்றிவாகை சூடிய அஜித், சிவா கூட்டணி - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Surya, Actress Jyothika

    அடுத்த செய்தி