• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெளியானது என்ஜிகே எமோஜி... கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்

வெளியானது என்ஜிகே எமோஜி... கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்

சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.

சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.

அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள என்ஜிகே படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    என்ஜிகே படத்துக்காக எமோஜிக்களை வெளியிட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

    இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் முதல் முறையாக உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா ரகிகர்களுடன் இன்று மாலை 5 மணிக்குபேச உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் #AskSuriya என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேள்வியை கேட்கலாம்’ என்று பதிவிட்டுள்ளது.



    இந்நிலையில் என்ஜிகே படத்துக்காக எமோஜிக்கள் தயாராகியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. #NGK #NGKFire #NGKFromMay31 உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜிக்கள் வெளியாகியிருப்பதாக அறிவித்துள்ளது.



    முன்னதாக விஜய்யின் மெர்சல், ரஜினியின் காலா உள்ளிட்ட படங்களுக்கு எமோஜிக்கள் வெளியான நிலையில் தற்போது சூர்யாவின் என்ஜிகே படத்துக்கும் எமோஜி வெளியாகியிருப்பதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: