• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என்.ஜி.கே சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என்.ஜி.கே சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார்.

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார்.

என்.ஜி.கே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் மே 31-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    என்.ஜி.கே படத்தின் சென்சார் குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் மே 31-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

    இந்நிலையில் படத்தின் சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி தணிக்கையில் இந்தப் படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.



    தன்னிகரில்லா ‘தல’அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: