ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்.ஜி.கே படத்தின் பிரமாண்ட கட் அவுட் அகற்றம்!

என்.ஜி.கே படத்தின் பிரமாண்ட கட் அவுட் அகற்றம்!

என்.ஜி.கே பட கட் அவுட்

என்.ஜி.கே பட கட் அவுட்

சூர்யா படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால், படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  என்.ஜி.கே படத்துக்காக வைக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் பிரமாண்ட கட் அவுட் அகற்றப்பட்டுள்ளது.

  இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை  எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இந்தப் படம், வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

  படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், சூர்யா ரசிகர்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால், படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் ரிலீஸ் என்றாலே பேனர், கவுட் அட் என கலைகட்டும் நிலையில் இந்தப் படத்துக்காக 215 அடியில் பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர் திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர்கள்.

  இந்த கட் அவுட், ரூ.6.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட் வைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாததால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்போது கட் அவுட் அகற்றப்பட்டுள்ளது.

  அனுமதியின்றி கட் அவுட் வைத்தது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  வீடியோ பார்க்க: தமிழகத்தில் வாக்கு பெற பிக்பாஸ் போதும் -சீமான்

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Suriya, NGK