• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சூரரைப்போற்று, அசுரன்

கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சூரரைப்போற்று, அசுரன்

சூரரைப்போற்று |அசுரன்

சூரரைப்போற்று |அசுரன்

78-வது கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் தமிழில் சூரரைப்போற்று, அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

  • Share this:
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. ஏர்டெக்கான் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான, கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரிலும், அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்ப, படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் தற்போது 78-வது கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது. மேலும் இந்த விருது விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் பெவர்லு ஹில்டன், பெவர்லி ஹில்ஸில் இந்த விழா நடைபெறவுள்ளது.



கரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் குளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன. இந்தத் தகவலை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேபோல் திரையரங்கில் வெளியான 'அசுரன்' திரைப்படமும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த இந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: