• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெய்பீம் ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு உதவ நினைக்கிறோம் - மார்க்ஸிஸ்ட் பொதுச்செயலாளருக்கு சூர்யா கடிதம்

ஜெய்பீம் ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு உதவ நினைக்கிறோம் - மார்க்ஸிஸ்ட் பொதுச்செயலாளருக்கு சூர்யா கடிதம்

சூர்யா, கே.பாலகிருஷ்ணன்

சூர்யா, கே.பாலகிருஷ்ணன்

ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவ முடிவு செய்துள்ளோம் என்று கே.பாலகிருஷ்ணனுக்கு சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரத்தில் பா.ம.க தரப்பிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்தநிலையில், ஜெய்பீம் திரைப்படத்தைப் பாராட்டி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு நடிகர் சூர்யா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘மதிப்புக்குரிய பாலகிருஷ்ணனுக்கு, வணக்கம், தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன். ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

    ஏழை எளிய மக்களக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும்,, அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே.சந்துரு, மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

    மேலும் மறைந்த ராஜாக்கண்ணுவின் துணைவியார் பார்வதி அம்மாளுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமைக் காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதி அம்மாளின் பெயரில் பத்து லட்ச ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும், அவர் பெற்றுக்கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

    மேலும், குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்துக்கு நிரந்தரத் தீர்வு. ஆகவேதான், ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்களின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: