அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தாவின் மறைவுக்கு நடிகர் சூர்யா தனது அஞ்சலியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவராக இருந்த மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வி.சாந்தா ஜனவரி 19-ஆம் தேதி, தனது 93 வயதில் காலமானார். அவரது அன்பான இதயத்துக்காகவும், நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காகவும் உலகின் அனைத்து பகுதி மக்களும் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக கோலிவுட் பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பதிவுகளில் டாக்டர் சாந்தாவுக்கு மனம் உருகி அஞ்சலி செலுத்தினர்.
கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி.. மனம் உருகும் அஞ்சலி..#AdyarCancerInstitute#DrShantha
இந்நிலையில் முன்னணி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில், ”கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி.. மனம் உருகும் அஞ்சலி..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா அவரது அகரம் அறக்கட்டளை மூலம் மேற்கொண்ட பல முயற்சிகளிலும், சமூக நலப்பணிகளிலும், டாக்டர் சாந்தாவுடன் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.