எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கு நடிகர் சூர்யாவே டப்பிங் பேசி அசத்தியிருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் தயாராகியிருக்கிறது. சூர்யா நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தெலுங்கு பதிப்புக்கான டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தனது காட்சிகளுக்கான தெலுங்கு வசனங்களை சூர்யாவே பேசியிருக்கிறார். பொதுவாக தெலுங்கு பதிப்புக்கு தமிழ் நடிகர்களுக்கு பதில் தெலுங்கு தெரிந்த வேறு யாரேனும் குரல் கொடுப்பதுதான் வழக்கம். சூர்யாவின் படங்களுக்கும் வேறு நபர்கள்தான் குரல் கொடுத்து வந்தனர்.
இதையும் படியுங்கள் : கர்ப்பகாலத்தில் விதவிதமாக புகைப்படம் வெளியிடும் காஜல் அகர்வால்..
தெலுங்கு கற்று எதற்கும் துணிந்தவனுக்கு சூர்யாவே தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார்.
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்துப் பின்னணியில் குடும்ப சென்டிமென்டுடன் ஆக்ஷன் அதிரடி கலந்த எதற்கும் துணிந்தவனை பாண்டிராஜ் எடுத்துள்ளார்.
சூர்யாவின் கடைசி இரு படங்களான சூரரைப்போற்று, ஜெய்பீம் இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் எதற்கும் துணிந்தவனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எதற்கும் துணிந்தவனை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.