• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மேடையிலேயே செல்வராகவனிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்ட சூர்யா!

மேடையிலேயே செல்வராகவனிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்ட சூர்யா!

சூர்யா - செல்வராகவன்

சூர்யா - செல்வராகவன்

#NGK | #Suriya | #Selvaraghavan | நீண்ட இடைவேளைக்கு பின் அரசியல் சார்ந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார் - சூர்யா

  • News18
  • Last Updated :
  • Share this:
மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார். 

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

Also Read : என்னை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தார் விஜய் - கத்ரினா கைஃப்

என்.ஜி.கே படத்தில் சூர்யா


இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்ந நிகழ்ச்சியில் சூர்யா, செல்வராகவன், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, 'நீண்ட இடைவேளைக்கு பின் அரசியல் சார்ந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார். மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தால் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும்' என விருப்பம் தெரிவித்தார்.

Also Read : தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சூர்யா மகன் வெற்றி!

இயக்குனர் செல்வராகவன் பேசுகையில், சூர்யாக ஒரு அற்புதமான நடிகர். என்.ஜி.கே படத்திற்கு அவர் அமைந்தது ஒரு மிகப்பெரிய வரம். நடிகை சாய்பல்லவி ஒரு குழந்தை மாதிரி நடிப்பார்கள்' என்றும் கூறினார்.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: