Suriya 40: கையில் கத்தி..முகத்தில் இரத்தம் ’எதற்கும் துணிந்தவன்’-சூர்யா 40 பர்ஸ்ட் லுக் வெளியானது..

எதற்கும் துணிந்தவன்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

  • Share this:
    சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

    ஒரே நேரத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட்,  சூர்யாவின் 40 வது படம் ஆகியவற்றை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
    இதில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில்,அண்ணாத்த படம் நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும், விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்காக ரஜினி முதுகு காட்டியபடி நிற்கும் புகைப்படத்துடன் தனி போஸ்டரை சன் பிக்சர்ஸ் வடிவமைத்திருந்தது.



    இந்நிலையில் சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவிந்திருந்தது. தற்போது பர்ஸ்ட் லுக்கை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

    சூர்யா 40 படத்தின் பெயர்’எதற்கும் துணிந்தவன்’ என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    Published by:Tamilmalar Natarajan
    First published: