• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யாவுடன் இணைந்தார் விஸ்வாசம் சிவா!

சூர்யாவுடன் இணைந்தார் விஸ்வாசம் சிவா!

சூர்யா 39

சூர்யா 39

  • News18
  • Last Updated :
  • Share this:
    சூர்யா நடிக்கும் 39-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே படம் மே 31-ம் தேதி ரிலீசாக உள்ளது. நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதையடுத்து சூர்யாவின் 37-வது படமாக உருவான காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார். மோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 30-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தில் சூர்யா இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது சூர்யா நடிக்கும் 39-வது படத்தின் அறிவிப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ரஜினியின் ’தர்பார்’: வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: