சூர்யா படத்திலும் விஸ்வாசம் கனெக்ஷன் - இயக்குநர் சிவாவின் ப்ளான்!
சூர்யா படத்திலும் விஸ்வாசம் கனெக்ஷன் - இயக்குநர் சிவாவின் ப்ளான்!
சூர்யா 39
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார் சூர்யா. ஆர்யா, சாயிஷா, மோகன்லால், பொமன் இரானி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
சூர்யா - சிவா இணையும் படம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே படம் மே 31-ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.
இந்தப் படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார் சூர்யா. ஆர்யா, சாயிஷா, மோகன்லால், பொமன் இரானி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்தியப் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.
காப்பான் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார்.
படம் முழுக்க நகரத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை இந்தப் படத்திலும் பயன்படுத்த இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க பயந்தேன் - பிரியா பவானி சங்கர்!
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.