• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா... ஹீரோயின் யார் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா... ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யா 38 பட பூஜை

சூர்யா 38 பட பூஜை

  • News18
  • Last Updated :
  • Share this:
    சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் சூர்யா 38 படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

    செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சூர்யா தேதிகள் ஒதுக்கியிருந்தார்.

    இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து குனித் மோங்காவும் தயாரிக்கிறார். குனித் மோங்காவிடம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை உள்ளது.

    ‘சூர்யா 38’ பாடல்கள் எப்படி? ஜி.வி.பிரகாஷ் குமார் பதில்

    ஜி.ஆர்.கோபிநாத் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து 1971 போரிலும் பங்கேற்றுள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றிய சக அதிகாரியின் துணையோடு ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவினார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் சர்வம் தாளமயம் பட ஹீரோயின் அபர்ணா முரளி நடிக்கிறார்.







    இந்தப் படத்தின் பாடல் ஒன்றுக்காக கேரளாவின் தாய்க்குடம் பேண்டு இசைக்குழுவினர் பணியாற்றியுள்ளதாகவும், அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    ராணுவ வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சூர்யா!

    வீடியோ பார்க்க: போட்டி இருக்கும் இடத்தில் வெல்வதே பவர்- பவர் ஸ்டார் பேட்டி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: