Home /News /entertainment /

’சூர்யா 37’ டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியிட்ட கே.வி.ஆனந்த்: ரசிகர்கள் உற்சாகம்

’சூர்யா 37’ டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியிட்ட கே.வி.ஆனந்த்: ரசிகர்கள் உற்சாகம்

இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் ஆர்யா மற்றும் சூர்யா

இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் ஆர்யா மற்றும் சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 37 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 37-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.

    கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யா, என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



    இந்நிலையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், தனது படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று கூறி அதற்கான பெயர்களை தேர்வு செய்யுமாறு பதிவிட்டிருந்தார். அதில் மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

    ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை அவரவர் விருப்பப்படி கூறிவந்த நிலையில், படத்தின் டைட்டிலை ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதை படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.



    நலவாழ்வு முகாமில் யானைகள் ஒய்யார நடைப்பயிற்சி - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Surya, Surya 37

    அடுத்த செய்தி