முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சபரி மலைக்குச் செல்ல முடிவெடுத்த பிரபல நடிகை!

சபரி மலைக்குச் செல்ல முடிவெடுத்த பிரபல நடிகை!

அதிதிபாலன்

அதிதிபாலன்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

``உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், மீண்டும் சபரிமலைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்று நடிகை அதிதி பாலன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் அருவி திரைப்பட நடிகை அதிதி பாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது ஈரோடு மாநகராட்சி பொதுமக்கள் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிதிபாலன், ``ஈரோட்டிற்கு முதன் முதலாக நான் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நடித்த அருவி படம் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. வக்கீலுக்கு நான் படித்திருந்தாலும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ளவில்லை. நாடகத்தில் நடிக்க முயற்சி செய்துவந்தபோது, அருவி திரைப்பட வாய்ப்பு வந்ததால் நடிக்கத் தொடங்கிவிட்டேன். என்னைச் சந்திக்கும் பலர் சமூக விழிப்புணர்வுப் படங்களில் நடிக்குமாறு கூறிவருகின்றனர். அதற்கான கதையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், கடந்த வாரத்தில், மூன்று முக்கியமான தீர்ப்புகளை, உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. சட்டம் படித்தவர் என்கிற முறையில், இந்த தீர்ப்புகளை நான் வரவேற்கிறேன். அதில், `சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம்' என்ற தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நானும் மூன்று முறை சபரிமலை சென்றுள்ளேன். இத்தீர்ப்பின் மூலம், மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல் ஓரினச்சேர்க்கை குற்றம் கிடையாது. திருமண உறவுக்கு வெளியேயான உறவும் குற்றமில்லை போன்ற தீர்ப்புகளும் வரவேற்கத்தக்கது” என்றார்.

First published:

Tags: Actress aditi balan, Aditi Balan, Aruvi actress, Sabarimala Temple Case, Supreme court judgement