நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.
ரஜினியின் வீட்டுவாசலில் குவிந்த ரசிகர்கள் அவரை நேரில் பார்க்க காத்திருந்தனர். ஆனால் ரஜினி ஊரில் இல்லை என அவரது மனைவி லதா கூறியதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு நேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Thank you 🙏🏻 pic.twitter.com/7UHsqPc3oA
— Rajinikanth (@rajinikanth) December 12, 2022
இதேபோல, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து, ஷாரூக் கான், அக்ஷய் கான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலகினருக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும், சச்சின் போன்ற விளையாட்டுத் துறையினர் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகள் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth