என் மார்பு மேல... நரம்புக்குள்ள... ரஜினியைப் பாராட்டி சிம்பு பாடிய பாடல் ரிலீஸ்
ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
- News18 Tamil
- Last Updated: July 4, 2020, 7:23 PM IST
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. மேலும் நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரஜினிகாந்த் (Superstar Anthem) என்ற படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிம்பு பாடியிருக்கும் பாடலை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். ஆர்.கௌதம் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு டிஎம் உதயகுமார் இசையமைத்துள்ளார். பாடல் முழுக்க ரசிகர்களின் கோணத்தில் ரஜினியைப் பாராட்டி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாடல் குயின் திரைப்படத்திலிருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் பாடல் குறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் நாயகன் ஹர்பஜன் சிங், மொத்த பேட்டையோட தலைவர் ரஜினிகாந்துக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம் என்றும், பாடலைப் பாடிய சிம்புவை மாஸ் மாமா என்றும் பாராட்டியுள்ளார்.
அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. மேலும் நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரஜினிகாந்த் (Superstar Anthem) என்ற படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிம்பு பாடியிருக்கும் பாடலை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.
மொத்த பேட்டையோட ஒரே #Thalaiva @rajinikanth க்கு என் ட்ரிபியூட் இந்த #SuperStarAnthem #FriendshipFirstSingle#STR மாஸ் மாமாhttps://t.co/NCSzTMyS4Hhttps://t.co/4UjBOZHeAw@JPRJOHN1 @ImSaravanan_P@shamsuryastepup @JSKfilmcorp@akarjunofficial #Losliya @RIAZtheboss @actorsathish
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 4, 2020