முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வித்தியாசமான லுக்கில் இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி..

வித்தியாசமான லுக்கில் இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி..

பிரகதி குரு

பிரகதி குரு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  • Last Updated :

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போன விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர், சாம்பியன் என்று பல சீசன்களை நடத்தி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்டவர் தான் அமெரிக்காவை சேர்ந்த தமிழர் பிரகதி குருபிரசாத். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இரண்டாமிடம் பிடித்தார்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே பாட்டு பாட கற்று கொண்டு விஜய் டிவியில் கலந்து கொண்டு பிரபலமானார். சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு அவர் சினிமாவிலும் பாடத் தொடங்கினார். தமிழ் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் இவர் பாடி வருகிறார் பிரகதி. மேலும் அவர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஒரு காதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

Photos  : ஃபிட்டாக இருக்கும் நடிகை ராஷி கன்னா- ஹாட் போட்டோஸ்

அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து தான் தற்போது அவர் பாடல்களையும் பாடி இசையமைப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறார். இவர் Independent ஆல்பம் பாடலைகளையும் நிறைய பாடியிருக்கிறார். மேலும் அவர் பாடி வெளியிட்ட சில ஆல்பம் பாடல்களுக்கும் youtube-ல் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதுதவிர எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் பிரகத்திக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் வித்தியாசமான லுக்குகளில் போட்டோக்களை பதிவிட்டு வருவார். அதில் சில புகைப்படங்களுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தாலும், சில போட்டோகளுக்கு அதிகபடியான விமர்சனங்களை பெறுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகிறார்.




 




View this post on Instagram





 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)



அதாவது இவர் Phony ஹேர் ஸ்டைல் வைத்து புகைப்படம் வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு லுக்கா, உங்களை நீங்களே ஏன் அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பலர் இது உங்களுக்கு செட்டாகவில்லை. இப்படி இருக்காதீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இவர் மிகவும் கவர்ச்சியான பிகினி உடையில் படகில் இருக்கும் சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பிகினி புகைப்படம் ஆச்சர்யத்தை அளித்தது. மேலும் பலரும் அந்த பதிவுக்கு பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது வித்தியாசமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுக்காக மீண்டும் விமர்சனங்களை பெற்று வருகிறார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Singer