பிகினி உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி..வைரலாகும் புகைப்படம்

பிரகதி குரு

பிரகதி இதுவரை தமிழில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் தமிழில் அனிருத், ஜி.வி.பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்களுடன் இணைந்து சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார்.

  • Share this:
மிகவும் பிரபலமான இளம் பின்னணி பாடகர்களில் ஒருவரான பிரகதி குருபிரசாத் 1997ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வளர்ந்த அவர், சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை கற்று வந்தார். பின்னர் அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வந்தார். 2010ம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் 2010 ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். பின்னர் 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் பெற்றார் பிரகதி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் கிடைத்தது மட்டுமின்றி, சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை‘ படத்தில் ஒரு கதாபத்திரத்திலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலா படத்தில் கதாநாயகியாக நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் அறியப்படாத காரணங்களால் அதை எடுக்க முடியவில்லை, தற்போது பிரகதி தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார்.

பிரகதி இதுவரை தமிழில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்களுடன் இணைந்து சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் பிரகதி, அங்கு தனது பணிகளை செய்து வருகிறார்.

AlsoRead:பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காதல் திருமணம்!

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி குருபிரசாத், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகளை ஷேர் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பிகிகி உடையில் ஒரு படகில் இருக்கும் புகைப்படம் ஒன்ரை ஷேர் செய்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)


 

முன்னதாக பீச்சில் அரை குறை ஆடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். தற்போது மீண்டும் மீண்டும் ஒரு பள்ளத்தாக்கில் பிகினி போட்டோஷூட்டுக்குச் சென்றுள்ளார், அங்கு அவர் ஏரியில் இருக்குமாறு புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)

மேலும் தனது போஸ்டில் “இயற்கை குணமடைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது எண்ணற்ற லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

  
View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)

என்னடா இப்படி இறங்கிடீங்க? என்ன கொடுமை பிரகதி இது? என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மற்றொரு யூசர் ஒருவர், பிரகதி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருப்பினும் பிரகதி ஷேர் செய்துள்ள புகைப்படம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: