இன்ஸ்டாகிராமில் 'அந்தரங்க உறுப்பு' வீடியோ - எக்ஸ்போஸ் செய்த சூப்பர் சிங்கர் திவ்யா

சூப்பர் சிங்கர் திவ்யா

அந்தரங்க உறுப்பு வீடியோவை அனுப்பிய நபரை சூப்பர் சிங்கரில் பங்கேற்ற திவ்யா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்ஸ்போஸ் செய்துள்ளார்.

  • Share this:
பாடகியான திவ்யா தீராத விளையாட்டுப் பிள்ளை, வில்லு உள்ளிட்ட படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கரையும் அவர் தொகுத்து வழங்கி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார். 2019ம் ஆண்டு சுபு தரகன் என்பவரை மணந்த திவ்யா, சினிமா மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் இருந்து விலகியிருக்கிறார்.

இந்நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அண்மையில் மெசேஜ் செய்த நபர் ஒருவர், தங்களுடைய பிராண்டுக்கு விளம்பரதாரராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். Zoya Kait என்ற ஐடியில் தொடர்பு கொண்ட நபரின் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், நிறுவனத்தின் ஐடியில் இருந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திவ்யாவின் ரிப்ளேவுக்கு பதில் அளித்த அந்த மர்ம நபர், ஆண்களின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என வினவியுள்ளார். இதில் ஷாக்கான திவ்யா, அந்த நபரின் மெசேஜ்கள் அனைத்தையும் ஸ்கிரீன்ஷாட் அடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Also Read : பாவம் கணேசன் சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை - ரசிகர்கள் வருத்தம்

அதில், "என் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு Zoya Kait என்ற ஐடியில் இருந்து மெசேஜ் வந்தது. பிராண்ட் ஒன்றை புரோமோஷன் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியான மெசேஜ்கள் வந்தது. அந்த ஐடி மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பிராண்டின் ஐடியில் இருந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.அதற்கு, ஆணின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி, இது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என கேட்டான். இதுபோன்ற நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் உதவ வேண்டும்" என நெட்டிசன்களிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார். இது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பிரபலமாக இருப்பவர்களை தொடர்பு கொள்ளும் மர்மநபர்கள் இதுபோன்று ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தும் இத்தகைய கயவர்களை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடித்து சட்டத்தின் வழி கடுமையான தண்டை வழங்கப்பட வேண்டும் எனவும் நெட்டிசன்கள் திவ்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பாடகி திவ்யாவுக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர்.

Also Read : ஈடுசெய்ய முடியாத இழப்பு... நடிகை நிஷா உருக்கம்

விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் 'என் ஜன்னல் வந்த காற்றே' என்ற பாடலையும், வில்லு படத்தில் 'தீம்தனக்கா தில்லானா’ பாடலும் இவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. இரண்டு பாடல்களும் ஹிட் பாடலாகவும் அமைந்தது.

 
Published by:Vijay R
First published: