பார்டிகளில் அதிகம் கலந்துகொள்ள மாட்டேன் - சன்னி லியோன்

சன்னி லியோன்

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது நட்பு வட்டம், குடும்பம், திரையுலக வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானேன். ராகினி எம்எம்ஸ் 2, ஏக் பஹேலி லீலா, குச் குச் லோசா ஹை, மஸ்திஸாதா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். தற்போது கோக-கோலா என்ற ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.

  இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் சிலர் எனது கடந்தகாலத்தை சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர். ஆனால் அதுகுறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.

  சன்னி லியோன்


  எனக்கென சிறிய அளவில் நட்பு வட்டம் உள்ளது. நட்சத்திர விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகளில் அதிக அளவில் கலந்துகொள்ள மாட்டேன். 2011- ல் எனது நீண்ட நாள் காதலர் டேனியல் வெப்பரை திருமணம் செய்து கொண்டேன். 2017-ல் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டோம். வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் உள்ளன.

  குடும்ப வாழ்க்கையும், திரையுலக வாழ்க்கையும் இணைந்து செயல்படுவதில் மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும் அதை சமாளித்து வருகிறேன். குழந்தைகளை கவனிப்பதே இந்த உலகின் மிகச்சிறந்த செயலாகும். எனது வாழ்க்கையில் தற்போது் நான் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் உள்ளேன்.  17 வருடங்களாக பொழுதுபோக்குத் துறையில் இருந்து வருகிறேன். இதில் எனக்கு பெரிய அளவில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் புரிந்துகொண்ட படைப்பாளிகள் என்று யாரும் கிடையாது. எனவே பிற திரைப்படங்கள் குறித்து எப்போதும் விமர்சிக்க மாட்டேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என எப்போதும் விரும்புகிறேன்” இவ்வாறு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  தல 60 அப்டேட்: 13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி?

  Published by:Sheik Hanifah
  First published: