படப்பிடிப்பு தளத்தில் தோளில் குடத்துடன் டான்ஸ் ஆடிய சன்னி லியோன்.. வைரல் வீடியோ..

சன்னி லியோன்

சமீபத்தில் சன்னி லியோன் (Sunny Leone) படப்பிடிப்பு தளத்தில் செய்த சில வேடிக்கையான சம்பவங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

  • Share this:
நடிகை சன்னி லியோன் ஓடிடி(OTT) தளத்தில் வெளியாகவுள்ள "அனாமிகா" (Anamika) வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் அனாமிகா படப்பிடிப்பு தளத்தில் செய்து வரும் சில வேடிக்கையான சம்பவங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சன்னி லியோன். விக்ரம் பட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் தொடரின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது.

ஷார்ட் கிளிப்பில், சன்னி லியோன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செட்டுகளுக்குத் திரும்பியதில் உற்சாகத்தில் இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் திரைக்கு பின்னால் செய்யும் சில வேடிக்கையான நிகழ்வுகளை கொண்ட வீடியோவை கடந்த 5-ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மும்பையில் உள்ள ஒரு பிரபலமான ஸ்டுடியோவுக்கு அருகிலுள்ள மேக்-ஷிப்ட் சிற்றுண்டி கடைக்கு அடுத்ததாக இந்த கிளிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் நடிகை தனது தோள்களின் ஒரு பக்கத்தில் ஒரு குடத்தையும் மறுபக்க இடுப்பில் ஒரு எஃகு தட்டையும் வைத்துக்கொண்டு நகைச்சுவையாக சில நடனங்களை மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஆலிவ் வண்ண ஜம்ப்சூட் அணிந்திருந்தார். வீடியோவில் குறைந்தபட்ச ஒப்பனையுடன் அவரது தோற்றம் இருந்தது. 
View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)


கூடுதலாக சில இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களையும் அவர் பதிவிட்டுள்ளார். ஸ்டோரீசில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் தரையில் பானி பூரி நொறுக்கி போடப்பட்டபடி இருந்தது. அதனருகில் கருப்பு நிற பூட்ஸ் அணிந்து கருப்பு நிற பையுடனும் சன்னி நின்று கொண்டிருக்கிறார். மேலும் அந்த படத்தின் கீழ் அவர் குறிப்பிட்டதாவது, "பானி பூரியுடன் பணியின் மற்றொரு நாள் !!" அதேபோல ஸ்டோரீசில் பகிர்ந்துள்ள மற்றொரு படத்தில், பானி பூரி நொறுக்கி போடப்பட்ட அதே இடத்தில் அவர் சன்னி சாதாரணமாக தரையில் அமர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் அந்த குறிப்பிட்ட படத்தில் அவர் குறிப்பிட்டதாவது, "நான் இந்த இடத்தை மெஸ் செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.  விக்ரம் இயக்கிய அனாமிகா என்ற வலைத் தொடரில் சோனாலி செகலும் நடிக்கிறார். ஒரு அதிரடி த்ரில்லர் எனக் கூறப்படும் இந்த நிகழ்ச்சி விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் பத்து அத்தியாயங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 
Published by:Sankaravadivoo G
First published: