பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் மோசடி வழக்கு தொடர்பாக கேரள காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆபாச படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பாலிவுட் நடிகை சன்னி லியோன். இவரைப் பற்றி எந்த ஒரு தகவல் என்றாலும் அது வைரலாகி விடுவதுண்டு. ‘Anamika’, 'Bullets' உள்ளிட்ட வெப் சீரீஸ் சீரியல்களில் சமீபத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன்.
டிவி நிகழ்ச்சி ஷூட்டிங்கிற்காக கேரளாவுக்கு குடும்பத்துடன் வந்துள்ள நடிகை சன்னி லியோன், அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் கேரள டிஜிபியிடம் நடிகை சன்னி லியோன் மீது பண மோசடி புகார் அளித்துள்ளார்.
பெரும்பாவூரைச் சேர்ந்த ஸ்ரீயாஸ் என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நடிகை சன்னி லியோன் கடைத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தம் செய்தேன். இதற்காக 29 லட்ச ரூபாய் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதலே அவரின் மேஜேஜருக்கு பல கட்டங்களாக பணம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணத்தை பெற்றுக்கொண்ட சன்னி லியோன், சொன்னது போல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரவில்லை. இதன் காரணமாக தற்போது காவல்துறையில் புகார் அளிக்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.
இப்புகாரை பெற்றுக்கொண்ட கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் திருவனந்தபுரத்தின் பூவாரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் நடிகை சன்னி லியோனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்டதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்ட சன்னி லியோன், கொரோனா பரவல் காரணமாக தான் அளித்த தேதியும், ஸ்ரீயாஸ் அளித்த தேதியும் ஒத்துப்போகவில்லை என விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. நடிகை சன்னி லியோன் தெரிவித்த விளக்கத்தை ப காவல்துறையினர் திவு செய்தனர்.
'MTV Splitsvilla' என்ற டிவி தொடருக்கான ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சன்னி லியோன் கேரளா வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.