காதலர் தின திட்டங்கள் குறித்து நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் மனம் திறந்துள்ளனர்.
அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் அதிக ரசிகர்களைப் பெற்று பிரபலமானவர் சன்னி லியோன். பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
சன்னி லியோனுக்கும் -டேனியல் வெபருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் இத்தம்பதி வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்ற இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.
இந்நிலையில் சன்னி லியோன் - வெபர் தம்பதி காதலர் தினம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர்.
அப்போது சன்னி லியோனின் கணவர் வெபர் கூறுகையில், காதலர் தினத்தன்று ஒரு வேலையாக டாக்கா செல்கிறேன். காலை நேரத்தை டாக்காவில் கழித்தாலும் மாலை வீடு திரும்பி என் அழகான மனைவியை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன். அதற்காக அவரிடம் நான் ஒப்புதலும் பெற்று விட்டேன்” என்றார்.
சன்னி லியோன் கூறுகையில், எனது குழந்தைகளான நிஷா, ஆஷர், நோவா ஆகியோருடன் தான் காதலர் தினத்தன்று எனது நேரத்தைச் செலவழிக்கப் போகிறேன். எனது கணவருடன் இரவு உணவு சாப்பிடுவேன்” என்றார்.
மேலும் காதலின் அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சன்னி லியோன், அர்த்தம் மிக எளிமையானது. அழகான மனைவி, மகிழ்ச்சியான வாழ்க்கை என்று கூறி சிரித்தார்.
டேனியல் வெபர், “சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு சமரசம் முக்கியம்” என்றார்.
மேலும் படிக்க: விஜய் மட்டுமே தமிழகத்தில் ஷூட்டிங் நடத்துகிறார்... பாஜகவின் போராட்டம் முறையற்றது - ஆர்.கே.செல்வமணி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.