முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டெல்லியில் 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் நடிகை சன்னி லியோன்!

டெல்லியில் 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் நடிகை சன்னி லியோன்!

நடிகை சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன்

பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா மிக மோசமான சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை மிக மோசமாக இருப்பதால் நாடு முழுவதும் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இதனால், பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக, சமூகத்தின் ஏழை பிரிவினரிடையே பசி இப்பொது ஒரு பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தன்னால் முடிந்த உதவியை நடிகை சன்னி லியோன் தேசிய தலைநகரான டெல்லியில் குடியேறிய தொழிலாளர்களுக்கு செய்ய முன்வந்துள்ளார். டெல்லியில் 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக சன்னி லியோன் பீப்பிள் ஃபார் தி எத்திகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (PETA ) உடன் கைகோர்த்துள்ளார். இந்த அமைப்பிற்கு உதய் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் ஆதரவு வழங்கி வருகிறது. இவர்கள் வழங்கும் இந்த உணவு தொகுப்பில் பருப்பு மற்றும் அரிசி, கிச்சடி, பழம் ஆகியவை இருக்கும்.

இது தொடர்பாக நடிகை சன்னி லியோன் பேசுகையில், “நாம் இப்போது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறோம். ஆனால் இரக்கத்துடனும் ஒற்றுமையுடனும் அதனை எதிர்த்து முன்னேற வேண்டும். இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு புரதம் நிறைந்த சைவ உணவைப் வழங்க PETA இந்தியாவுடன் மீண்டும் கைகோர்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் . ” என்று கூறியுள்ளார். இன்றைய நிலவரப்படி டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,73,035 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 90,629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also read... உணவளித்தவர் மரணம்... இறுதிச்சடங்கிற்கு 5 கிமீ தூரம் நடந்து சென்ற நாய்!

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11,64,008 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 18,398 ஆக உயர்ந்துள்ளது. ஏழைகளுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் உணவு வழங்க முன்வந்துள்ளது நடிகை சன்னி லியோன் மட்டுமல்ல. பாலிவுட் நடிகர் சல்மான் கானும் தனது உணவு லாரிகளை புதுப்பித்து, மும்பையில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு உணவு பேக்குகளை விநியோகித்து வருகிறார்.

சல்மானின் உணவு லாரிகள் வொர்லி மற்றும் ஜுஹு பகுதிகளில் உணவு பொட்டலங்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர நடிகை ஷில்பா ஷெட்டி ‘ரிப்போர்ட் ஹங்கர் - கானா சாஹியே அறக்கட்டளை’ என்ற ஒரு தளத்தைத் தொடங்கினார். அந்த தளத்தின் மூலம் அவர் தனது குழுவுடன் ஏழை மக்களுக்கு சமைத்த உணவு அல்லது மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறார். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில் குடிமக்களுக்கு உதவ சோனு சூத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், அக்‌ஷய் குமார், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actress Sunny Leone, Bollywood, Covid-19, Migrant workers