சன்னி லியோன் குடும்பத்தினருடன் கேரளா பயணம்... காரணம் இது தான்!

சன்னி லியோன்

சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுடன் விமான நிலையத்திலிருந்து ஒரு படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

  • Share this:
சன்னி லியோனின் உண்மையான பெயர் கரண்ஜித் கவுர் வோக்ரா. கடந்த 2001-ஆம் ஆண்டு ஆபாச பத்திரிக்கையானபென்ட் ஹவுஸ்இதழின் அட்டைப்படத்திற்கு நிர்வாண போஸ் அளிக்கும் போது அவருக்கு சன்னி லியோன் என புதிய பெயர் வைக்கப்பட்டது. சன்னி லியோன் ஆபாசப்பட உலகிற்கு வருவதற்கு முன்னர் நர்சிங் படிப்பை முடித்திருந்தார் .தனது 19-வது வயதில் சன்னி லியோன் செக்ஸ் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சன்னி லியோனுக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்கும். பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்னரே அவர் நான்கு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். நடிகை சன்னி லியோன் கனடா மற்றும் அமெரிக்கா என டூயல் சிட்டிசன்ஷிப் கொண்டவர். இதுதவிர இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடிமகள் எனும் உரிமத்தையும் பெற்றிருக்கிறார். இங்கிலிஷ் நடிகையான இவர் இந்தியில் பிக் பாஸ் சீஸன் - 5, நாகினி என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கால்பதித்து கலக்கியவர்

சன்னி லியோனியை பற்றி எந்த செய்தி வந்தாலும் அது வைரலாகி விடுவது வழக்கம். அந்தவகையில் MTVயில் ஒளிபரப்பப்படும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா 13 வது சீசனின் (13th season of Splitsvilla) படப்பிடிப்புக்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் (Bollywood star Sunny Leone) கேரளா வந்துள்ளார். இப்போது இதுதான் கேரள இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் சன்னி லியோனின் ரசிகர்களுக்கும் ஹாட் டாபிக்பரபரப்பான ட்விஸ்ட்டுகள், சண்டைகள், சர்ச்சைகள் என மீண்டும் களமிறங்கிவிட்டது MTVயின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 13. இளைஞர்கள் அதிகம் விரும்பும் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் சன்னி லியோன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதால் மட்டுமே

நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள், சம்பவங்கள் என இந்த ரியாலிட்டி ஷோவுக்கு இப்போது இன்னும் ரசிகர்கள் பட்டாளம் கூடியிருக்கிறது. 13வது சீசனும் வெற்றிகரமாக ஆரம்பிக்க இம்முறை கொஞ்சம் சர்ச்சைகளை அதிகம் கிளப்ப திட்டமிட்டுவிட்டார்கள் போல தெரிகிறது. கொரோனா சிக்கல் இருப்பதால் பலரும் வீட்டிலிருந்து ஆபிஸ் வேலை செய்வார்கள். அதனால் பல மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் நிகிழ்ச்சியின் மவுஸ் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் (Daniel Weber) மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தினரும் உடன் வந்துள்ளனர். சன்னி லியோன் மற்றும் அவரின் குடும்பத்தினர் கடந்த வியாழன் மாலை திருவனந்தபுர விமான நிலையத்தில் தரையிறங்கினர்

எனக்கு பிடித்த இடமான 'கடவுளின் சொந்த நாடு கேரளாவில் ஸ்பிளிட்ஸ்வில்லாவிற்க்காக (Splitsvilla) வந்துள்ளேன்என்று சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுடன் விமான நிலையத்திலிருந்து ஒரு படத்தையும் ஷேர் செய்துள்ளார். "எனது முழு குடும்பத்தினருடனும் இங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று சன்னி லியோன், கேரளாவின் பிரபல செய்தி ஊடகமான மாத்ருபூமி நியூஸிடம் கூறியுள்ளார். ஒரு வாரம் கழித்து படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், சன்னி லியோன் மற்றும் குடும்பத்தினர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பிற்க்காக சன்னி லியோன் ஒரு மாதம் கேரளாவில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Ram Sankar
First published: