விஷேச வீட்டில் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகர் வினோத் பாபு!

வினோத் பாபு மற்றும் அவரது மனைவி

வினோத் பாபு அறிமுகமான ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ சீரியல் விஜய் டீவியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது.

  • Share this:
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாபு, தான் அப்பாவாக போகும் செய்தியை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்த நிலையில் தற்போது ஸ்பெஷல் வீடியோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் வினோத் பாபு. அடுத்து, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அடுத்ததாக, விரைவில் ஒளிபரப்பாக உள்ள ’தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலும் கதாநாயகனாக நடிக்கும் அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீர் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் வீட்டின் இனிப்பான செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் தங்கள் குடும்பம் வளரப்போகிறது என மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரின் இந்த பதிவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வினோத் பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற இவரது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியில் மேடையிலேயே குத்தாட்டம் போட்டுள்ளார் வினோத் பாபு. இந்த வீடியோவ மற்றும் தனது மனைவியுடன் வளைகாப்பு நடத்திய புகைப்படங்களையும் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். வினோத் பாபு அறிமுகமான ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ சீரியல் விஜய் டீவியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி நடித்தார். இந்த சீரியலில் பாட்டியின் அரவணைப்பில் வளரும் ஹீரோ, அக்கா மற்றும் தாயின் அரவணைப்பில் வளரும் ஹீரோயின் தேஜஸ்வனியுடன் முதல் சந்திப்பில் இருந்தே மோதலில் ஈடுபடுகிறார்.

எதிரும், புதிருமாகவே இருவரும் இருக்கும்போது தேஜஸ்வனியை பேரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்புகிறார் ஹீரோவின் பாட்டி. அவரின் விருப்பம் நிறைவேறியதா? என்பதைக் கொண்டு பல்வேறு திருப்பங்களுடன், சுவாரஸ்யமாக இந்தத் தொடர் நிறைவடைந்தது. இதனையடுத்து அவர், ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலும் நடிக்கிறார். இந்த சீரியலின் புரோமோ அண்மையில் வெளியான நிலையில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Also read... ’அன்பு அண்ணன்களுக்கு நன்றி’ ஈரமான ரோஜாவே அழகரின் நெகிழ்ச்சிப் பதிவு!

இதனால் இந்த சீரியல் ரிலீஸ் ஆகா தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது வினோத் பாபு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதில் ஆட்டம் பாடம் என உற்சாகமாக இருக்கும் வினோத் பாபு தனக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் இருப்பது தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: