என்னுடைய வற்புறுத்தலால் குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தாரா? - சுந்தர் சி விளக்கம்

குஷ்பு சுந்தர் சி

எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கடந்த சில மாதங்களாக குஷ்பு ஈடுபாடு காட்டமலேயே இருந்துவந்தார். மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தநிலையில், குஷ்பு ஆதரவு தெரிவித்தார். அதனையடுத்து, அவர் பா.ஜ.கவில் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்தது. இருப்பினும், அந்த தகவலை குஷ்பு உறுதியாக மறுத்துவந்தார். இந்தநிலையில், அவர் பா.ஜ.க இணைகிறார் என்று நேற்று உறுதியாக தகவல்கள் வந்தன. அதற்காக, அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்தநிலையில், இன்று காலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டார். அதனையடுத்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு ராஜினாமா செய்தார். இந்தநிலையில், சற்று நேரத்துக்கு முன்னர் குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார்.

இணைந்த பிறகு பேசிய குஷ்பு, ‘எந்தக் குறையும் இல்லாத பிரதமர் மோடியின் ஆட்சி பிடித்துப் போய் பா.ஜ.க-வில் இணைந்ததாக பேட்டியளித்தார்.


இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர்.சி-தான் குஷ்பு பா.ஜ.க-வில் சேருவதற்கு காரணம் என பேசினார். இதுகுறித்து சுந்தர்.சி-யிடம் கேட்டபோது, எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய துறையே வேற என்றார்.
Published by:Karthick S
First published: