சன் டிவி சீரியலுக்கு குட் பை சொன்ன நடிகை - புதிதாக இணைந்த நிவேதிதா

சன் டிவி சீரியலுக்கு குட் பை சொன்ன நடிகை - புதிதாக இணைந்த நிவேதிதா

திருமகள் தொடர்

திருமதி சீரியலில் பிரகதி கேரக்டரில் நடித்திருந்த சுஷ்மா திடீரென விலகியுள்ளார். அந்தக் கதாபாத்திரத்தில் இனி நிவேதிதா நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அப்போது பழைய எபிசோட்கள் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தன. ஊரடங்கில் தளர்வுகள் அளித்து ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் நடந்தாலும் பாதுகாப்பு காரணம் மற்றும் வெளியூரிலிருந்து படப்பிடிப்புக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில தொடர்கள் நிறுத்தப்பட்டன. புதிதாக ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் திருமகள். ஹரிகா, சுரேந்தர் சண்முகம், ஷமிதா ஸ்ரீகுமார், சுஷ்மிதா நாயர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இத்தொடர் தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இத்தொடரில் பிரகதியாக நடித்து வந்த சுஷ்மிதா நாயர் திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை நிவேதிதா நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே கல்யாண பரிசு 2, வாணி ராணி, முள்ளும் மலரும் உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர்.

திருமகள் சீரியலில் இருந்து விலகியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருக்கும் சுஷ்மிதா, என்னை நல்லமுறையில் நடத்தியதற்கு திருமகள் குழுவினருக்கு நன்றி. ஒரு சிலர் என்னுடைய நலம் விரும்பியாகிவிட்டார்கள். ஷமிதா, ரித்திகா, சங்கீதா உள்ளிட்டோரை மிகவும் மிஸ் செய்வேன். ஆனால் விரைவில் உங்களை சந்திப்பேன். பிரகதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களை மகிழ்வித்திருப்பேன். ஆனால் நாயகி தொடரில் அனன்யா கேரக்டரை விட அதிகம் என சொல்ல முடியாது. கவனமாக படித்து பாருங்கள் உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.” என்று கூறியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Sushma Nair (@sushmanair07)


சன் டிவியில் இரவு ஒளிபரப்பாகி வந்த திருமகள் தொடர் இனி மதிய வேளையில் ஒளிபரப்பாகும் எனவும் சேனல் தரப்பு அறிவித்துள்ளது.
Published by:Sheik Hanifah
First published: