நந்தினி சீரியல் நடிகைக்கு ஜோராக நடந்த வளைகாப்பு : வைரலாகும் புகைப்படம்..

சன் டிவி சீரியல் நடிகை

நடிகை கீர்த்தி, நடிகர் ஜெய் தனுஷும் பல காலங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.

  • Share this:
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் சன் டிவியின் 'நந்தினி' மிகவும் பிரபலமடைந்த சீரியல் என்று சொல்லலாம். இந்த சீரியலை நடிகை குஷ்பு சுந்தர் தயாரித்துள்ளார். மேலும் இயக்குனர் சுந்தர் சி. இயக்கியுள்ளார். குறிப்பாக இந்த சீரியலில் மாயா காதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த காதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை கீர்த்தி. இவரும் நடிகர் ஜெய் தனுஷும் பல காலங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.

தனுஷும் ஒரு பிரபலமான சீரியலில் நடித்து வருபவர் தான். தமிழ் சின்னத்திரையில் அதிக நாட்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரலேகா ஆகும். 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் இதுவரை 1800 எபிசோடுகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

சன் டிவியில் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஜெய் தனுஷ். இவர் இடையில் சீரியலில் இருந்து விலகி பின்னர் மீண்டும் ரீ – என்ட்ரி கொடுத்தார். இதில் சஞ்சய் பரந்தாமன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய் தனுஷ் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி சீரியல்களில் நடித்து வருகிறார்.
 

இந்த நிலையில் நடிகர் ஜெய் தனுஷ், சீரியல் நடிகை கீர்த்தி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவருமே பிசியாக சீரியல்களில் நடித்து கொண்டிருந்ததால், குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்தனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கீர்த்தி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது.இதையடுத்து, கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நாங்கள் விரைவில் அம்மா அப்பா ஆகப் போகிறோம் என்பதை இந்த நல்ல நாளில் எல்லோருக்கும் தெரிவிக்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.

 
மேலும், அன்னையர் தினத்தன்று வளைகாப்பு புகைப்படங்களை வெளியிடுகிறோம் என்று தம்பதியினர் தெரிவித்தனர். இந்த நிலையில், அன்னையர் தினத்தன்று (மே 9ம் தேதி) வளைகாப்பு புகைப்படங்களை நடிகை கீர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிந்து கொண்டார்.

Also Read: கவர்ச்சியில் குதித்த திவ்யா துரைசாமி - 'நமீதா' என ரசிகர்கள் புகழாரம்!

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் ஜெய் தனுஷும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பலர் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், தங்களது வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தம்பதியினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: