• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sun TV Serial Actress: 'இது நடிப்பு இல்லை..ரியல்' - வெளியான சன் டிவி சீரியல் நடிகையின் திருமண வீடியோ..

Sun TV Serial Actress: 'இது நடிப்பு இல்லை..ரியல்' - வெளியான சன் டிவி சீரியல் நடிகையின் திருமண வீடியோ..

சஹானா

சஹானா

கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் சஹானா ஷெட்டி, தன்னுடைய திருமணத்தில் தாலி கட்டும்போது வெளிப்படுத்திய கியூட் எக்ஸ்பிரசன்ஸ் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

  • Share this:
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் சஹானா ஷெட்டி நடித்து வருகிறார். பகல் நிலவு சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த அவர், ’அழகு’ சீரியலில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ரேவதியின் மகளாக நடித்திருந்தார். இவர்களுடன் தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், வி.ஜே சங்கீதா, லோகேஷ் பாஸ்கரன் உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த சீரியல் மூலம் மார்க்கெட்டை பிடித்திருந்த நிலையில், திடீரென அழகு சீரியலில் இருந்து விலகினார். தற்போது, கண்ணான கண்ணே சீரியல் மூலம் ரீ என்டிரி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அண்மையில் காதலன் அபிஷேக்குடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவேற்றியிருந்தார்.

அந்த வீடியோவில் இருவரும் கட்டியணைத்துக்கொண்டு அன்புமழை பொழிந்தனர். கியூட்டாக இருவரும் கொஞ்சிக் கொள்ளும் வீடியோவை ரசிகர்களும் மிகவும் ரசித்தனர். சஹானா சீரியல் நடிகையாக இருப்பதால், வீடியோவும் இணையத்தில் வைரலானது. நடிகையாக இருந்து கொண்டு காதலுடன் வெளிப்படையாக சமூகவலைதளங்களில் ரொமான்ஸ் செய்கிறாரே? என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

 



 




View this post on Instagram





 

A post shared by Sahana (@actresssahanaa)





ஆனால், அவர் தற்போது பதிவேற்றியிருக்கும் வீடியோ அவர்களின் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது. காதலர் அபிஷேக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர், அந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். திருமண நாளன்று சஹானாவின் கியூட் எக்ஸ்பிரசன்ஸ் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளச் செய்கிறது. மாலை மாற்றும்போது சஹானா, அபிஷேக்குடன் சின்ன சேட்டை விளையாட்டில் ஈடுபடுகிறார். சொந்தபந்தங்கள் புடைசூழ கோலகலமாக நடைபெற்ற அந்த திருமணம் முழுவதும் ஒருவிதமான பரவசமான நிலையிலேயே சஹானா இருக்கிறார்.

Also Read : வெள்ளை நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்..



 




View this post on Instagram





 

A post shared by Sahana (@actresssahanaa)





திருமணம் முடிந்த பிறகே கணவருடன் ரொமான்ஸில் ஈடுபடும் வீடியோவை சஹானா இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார். முதலில் ரொமான்ஸ் வீடியோவையும், பின்னர் திருமண வீடியோவையும் பதிவேற்றியதால், வழக்கமான கற்பனைகளை நெட்டிசன்கள் சிதறவிட்டனர். சஹானாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவல் கிடைத்தவுடன் கூலான நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துகளையும் அனுப்பி வருகின்றனர். விரைவில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read : செம்ம மாடர்ன் லுக்கில் போட்டோஸ் பதிவிட்ட விஜய் டிவி சீரியல் நடிகை..



 




View this post on Instagram





 

A post shared by Sahana (@actresssahanaa)






இதில் சின்னத்திரையைச் சேர்ந்த சக நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. சஹானாவின் வீடியோவை பார்க்கும்போது சீரியலில் ரீல் எக்ஸ்பிரசன்ஸ் கொடுப்பதைவிட, ரியல் எக்ஸ்பிரசன்ஸ் மிகவும் கியூட்டாகவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அவரின் சுட்டித்தனமான கியூட் சேட்டைகளை பலரும் இன்ஸ்டாவில் ரசிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: